எல்லாவற்றிலும் நவீனம் புகுத்துவிட்டோம்.அன்றாட வாழ்க்கை முறையில் அவசியமாய் உடல் கழிவுகளை வெளியேற்ற செய்யும் முறைகளில் கூட நவீனம் தான். வயோதிகர்களுக்கு வரப்பிரசா தமாய் அமைந்த கழிப்பறைகளே இன்று அனைவரது வீடுகளிலும் வியாபித்திருக்கிறது. இதிலும் இந்திய கழிப்பறைதான் சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏன் என்று தெரிந்துகொள்வாமா?
சிறந்தமுறை
இன்று மூட்டுவலி காரணங்களால் அவதிப்படுபவர்கள் பலருக்கும் காலை கடன் கழிப்பதில் பெரும் பிரச்சனை இல்லை. அவர்களுக்காகவே வீடுகளிலும் வெளியிடங்களிலும் வெஸ்டர்ன் கழிப்பறை கள் வந்துவிட்டது. இன்று அதிகப்படியான இடங்களில் வெஸ்டர்ன் கழிப்பறைகள் தான்பயன்படுத்த ப்படுகிறது.இவை உட்காருவதற்கு வசதியாக இருந்தாலும் உடலுக்கு தீமையே தருகிறது. ஆனால் இயல்பாக குத்தவைத்து அமரும் நிலையில் மலத்தைவெளியேற்றுவதுதான் சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள் .வெஸ்டர்ன் டாய்லெட்டை விட இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவதில் 5 நன்மைகள் உண்டு. என்னவென்பதை பார்க்கலாமா?