எனினும் இந்தப் போராட்டத்தால் ஆட்டை ஏற்றிக் கொன்ற நிறுவனத்துக்கு ரூ. 6 கோடியே 28 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. மாநில நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லும் கனரக வாகனங்களாலே அதிகளவில் ஆடுகள் போன்ற உயிர்கள் கொல்லப்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச் செல்வம். இவருக்குச் சொந்தமாக 250 ஆடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. முத்துச் செல்வம் தினமும் காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மாலை ஆட்டுக் கொட்டிலுக்கு அழைத்துச் செல்வார்.
அதே போல் முத்து செல்வம் ஆடுகளை அழைத்துக் கொண்டு நேற்று மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு கொட்டிலுக்குத் திரும்பியுள்ளார். அப்போது முத்து செல்வன் ஆடுகளைக் கவனிக்காத நேரத்தில் லாரி ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. அந்த லாரி அவ்வழியாக வந்த ஆடுகள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட ஆடுகள் அதிர்ச்சியில் அதே இடத்தில் சரிந்து கிடந்தது. ஆடுகளை மோதிய லாரி, நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. மேலும் 50 ஆடுகள் பலத்த காயமடைந்து அசைய முடியாமல் கிடந்துள்ளது.
50 உயிர்கள் பலத்த காயம்!